மாநாடு பட வெற்றியால் 3 மடங்கு சம்பளத்தை உயர்த்திய சிம்பு.. ஆடிப்போன தயாரிப்பாளர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுமையான மாறுபட்ட கதையம்சம் கொண்ட மாநாடு திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவோடு அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இப்படம் இதுவரை 100 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழில் இந்த ஆண்டில் 100 கோடி வசூல் சாதனை புரிந்த மாஸ்டர், டாக்டர், அண்ணாத்தே போன்ற திரைப்படங்களின் வரிசையில் மாநாடும் தற்போது இணைந்துள்ளது.

படம் வெளியாகி 25 நாட்கள் கடந்த பிறகும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாநாடு படத்தில் சிறப்பாக நடித்த சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா இருவருக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதன் காரணமாக சிம்பு தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளார். சிம்புவிடம் கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர் லலித் அவரை அணுகியுள்ளார். அப்போது சிம்பு தனக்கு ஒரு படத்தில் நடிப்பதற்கு இருபது கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட தயாரிப்பாளர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிம்பு மாநாடு படத்திற்காக 6 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இப்போது மாநாடு திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

இது தவிர இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு இது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சிம்பு தன்னுடைய சம்பளத்தை இவ்வளவு அதிகபடுத்தியுள்ளார். சிம்புவை போல் மாநாடு திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பால் மிரட்டிய எஸ் ஜே சூர்யாவும் தன்னுடைய சம்பளத்தை 6 கோடியாக ஏற்றியுள்ளார்.

இவர்களைப் போலவே படத்தின் ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷனும் தன்னுடைய சம்பளத்தை இரண்டு கோடியாக ஏற்றியுள்ளார். ஒரு படத்தின் வெற்றி இவர்களை எல்லாம் எப்படி மாற்றி விட்டது என்று திரையுலகினர் பலரும் வியப்பில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்