மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது சிம்பு தமிழ் சினிமாவின் வெற்றி நடிகராக வலம் வருகிறார். தற்போது அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர் நடித்து கிடப்பில் போடப்பட்ட பல திரைப்படங்களும் தற்போது தூசி தட்டி எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பத்து தலை திரைப்படம் தற்போது மீண்டும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில்தான் சிம்பு தற்போது ஒரு புது சிக்கலை சந்தித்துள்ளார். அதாவது அவர் மாநாடு படத்திற்கு முன்பு உடல் எடை கூடி பூசணிக்காய் போன்று இருந்தார்.
அதன் பிறகு சிறிது உடல் இளைத்து அரை பூசணிக்காய் போல மாறினார். தற்போது பல உடற்பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடையை அதிகமாக குறைத்து சிக்கென்று சின்ன பையன் போல் இருக்கிறார். 20 வயது பையனாக மாறி இருக்கும் இந்த சிம்புவை அனைவருக்கும் பிடித்திருக்கிறது.
அதற்கு தான் தற்போது ஒரு சோதனை வந்திருக்கிறது. அது என்னவென்றால் சிம்பு குண்டாக இருக்கும் போது பத்து தலை திரைப்படத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இப்பொழுது அவர் ரொம்பவும் ஒல்லியாக தகடு போல மாறி விட்டார்.
இதனால் பத்து தல பட குழுவினர் சிம்புவிடம் உடல் எடையை சற்று அதிகப் படுத்தும் படி கோரிக்கை வைத்து வருகின்றனர். கஷ்டப்பட்டு குறைத்த உடலை மீண்டும் ஏற்ற வேண்டுமா என சிம்பு சற்று யோசித்து இருக்கிறார். ஆனால் படக்குழுவினர் கொஞ்சமாக எடையை ஏற்றி பூசினாற் போல் வந்தால் போதும் என்று கூறியிருக்கின்றனர்.
இதற்கு சிம்புவும் அரை மனதாக சம்மதித்திருக்கிறார். மேலும் அவர் இப்போது உடம்பை கொஞ்சம் அதிகப் படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட அவருடைய ரசிகர்கள் சிம்பு மீண்டும் முழு பூசணிக்காய் போன்று மாறி விடுவாரோ என்ற கவலையில் இருக்கின்றனர்.