Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவுக்கு என்னதான் ஆச்சு? அடுத்த படமும் டிராப்.. சத்திய சோதனை
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்று ஆகிவிட்டது. மற்ற நடிகர்கள் அனைவரும் எத்தனை படங்கள் வெளியிடுகிறோம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தால், சிம்பு மட்டும் எத்தனை படங்கள் ட்ராப் செய்கிறோம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். கெட்டவன், கான், மாநாடு அப்பப்பா. லிஸ்ட் நீளமா போகுது.
அதெல்லாம் சரிப்பா.. இப்ப என்ன பிரச்சனை?
சமீபகாலமாக வெயிட் போட்டு தவித்துக்கொண்டிருந்த சிம்பு, மாநாடு படத்தில் கமிட் ஆன பிறகு அதன் தயாரிப்பாளரின் செலவிலேயே வெளிநாடு சென்று உடலை குறைக்கும் வேலையில் ஈடுபட்டார். திரும்ப இந்தியா வந்தபோது அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று முரண்டு பிடித்துள்ளார். அதனால் இந்த படமும் டிராப் ஆனது. மாநாடு படத்தை வெங்கட்பிரபு இயக்க இருந்தார்.
அந்தப்படத்தின் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு இணைந்து நடிக்கும் மப்டி படத்தின் ரீமேக்கில் ஒரு ஷெட்யூல் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு லண்டன் சென்ற சிம்பு சில காலம் திரும்ப வரவே இல்லை. தற்போது சென்னையில்தான் உள்ள சிம்பு, மப்டி படத்திற்கு கொடுத்த தேதிகளில் நடிக்க வர மாட்டேங்கிறார் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கேஸ் போட்டுள்ளார்.
சிம்புவுக்கு இருக்கும் ரசிகர்கள் நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் சிம்புவின் மேல் வைத்திருக்கும் அன்புவிற்கு அவர் நியாயம் செய்கிறாரா என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. சிம்பு என்றாலே பிரச்சினை என்று வெளியே சொன்னாலும் அவருக்கு பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் சிம்பு ஏன் இப்படி செய்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை..
