Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெங்கட்பிரபுவுக்கு கோயில் கட்டும் சிம்பு ரசிகர்கள்.. மாநாடு படப்பிடிப்பு துவங்கிய புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது சிம்பு பட சூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வந்து விட்டது தான். சிம்புவின் மீது குற்றச்சாட்டுகள் வைக்காத தயாரிப்பாளர்களே கிடையாது. சுரேஷ் காமாட்சி எந்தவித குற்றச்சாட்டுகளும் சிம்புவின் மீது வைக்காமல் அவரை எப்படி கையாள வேண்டுமோ அப்படி கையாண்டு தற்போது மாநாடு படத்தை சாத்தியமாக்கி உள்ளார்.

maanadu-01
முதலில் மாநாடு படம் அறிவிக்கப்பட்ட போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பின. மேலும் முதன்முறையாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்ததால் எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. ஆனால் திடீரென மாநாடு படம் டிராப் செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

maanadu-02
பிறகு எப்படியோ ஒருவழியாக மாநாடு படத்தில் சிம்பு நடிக்க சம்மதம் தெரிவித்தவுடன் படபடவென மற்ற நடிகர்களை புக் செய்து சிம்புவுக்கு படத்தை டிராப் செய்ய எந்தவித சந்தர்ப்பமும் தராமல் அனைத்தையும் பக்காவாக செய்துவிட்டார் சுரேஷ் காமாட்சி. அவர் கமிட் செய்த ஆட்கள் எல்லாம் பெரிய ஆட்கள்.

maanadu-03
இதனால் சிம்பு கட்டாயமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திக்கு தள்ளப்பட்டுள்ளார். இருந்தும் சிம்புவுக்கும் மாநாடு படத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளதால் தற்போது படப்பிடிப்பு சென்னையில் துவங்கி உள்ளது. இரண்டு நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தி விட்டு மீதியை இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 50 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட தீவிரமாக வேலை செய்து வருகின்றனர் படக்குழு. சிம்புவை தவிர கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி என பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். 90கிட்ஸ்க்கு கல்யாணமானதைப் போல் சிம்பு ரசிகர்கள் சந்தோசமாக ட்விட்டரில் மாநாடு படத்தை டிரென்ட் செய்து வருகின்றனர்.
