Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருந்திய சிம்பு.. களத்தில் இறங்கிய வெங்கட் பிரபு.. கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் டிராப் நடிகர் என பெயர் வாங்கியவர் நடிகர் சிம்பு. இவர் நடித்த படங்களைவிட கைவிட்ட படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சிம்பு கைவிட்ட அனைத்து படங்களுமே அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
சமீபத்தில்கூட மாநாடு படம் கைவிடப்பட்டதாக அறிவித்தபோது மகாமாநாடு என்ற புதிய படத்தை சொந்தமாக தயாரித்து இயக்குவதாக செய்திகளை வெளியிட்டனர். அதற்கு முன்பு ஒரு ஆங்கில படத்தை இடைவேளை இல்லாமல் இயக்கப் போவதாகவும் சிம்பு அறிவித்திருந்தார்.
ஆனால் பொசுக்கென்று சபரிமலைக்கு மாலை போட்டு விட்டு சென்று விட்டார். இந்நிலையில் மீண்டும் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்குச் செல்ல இருப்பதாக சிம்பு மற்றும் அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெங்கட்பிரபு இந்த படத்தின் படப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அதனை உறுதி செய்யும் வகையில் வெங்கட் பிரபு மற்றும் யுவன் ஷங்கர் ராஜா, மாநாடு படத்தின் இசை வேலையை தொடங்கி விட்டதாக சமூகவலைதளத்தில் போட்டோவை பகிர்ந்துள்ளனர். அதற்கு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இனிதே துவங்கியது மாநாடு எனும் புகைப்படத்தை சேர் செய்துள்ளார்.
#Maanaadu @vp_offl 2020 pic.twitter.com/TIu09bVcNB
— Raja yuvan (@thisisysr) January 5, 2020
இதனால் சிம்பு ரசிகர்கள் மிகவும் ஆனந்தத்தில் இருக்கின்றனர்.
