Tamil Cinema News | சினிமா செய்திகள்
தெரியாம சிம்புவை வைத்து படம் எடுத்து விட்டேன்.. படுத்துறாங்க என புலம்பும் தயாரிப்பாளர்!
சிம்புவை வைத்து ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கு பாகிஸ்தான் பார்டருக்கு செல்வதைப்போல பதட்டமாகவே இருக்கும்.
சிம்பு சில சமயங்களில் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு விடமாட்டார், திடீரென பாதி படப்பிடிப்புகளில் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என விலகி விடுவார் என பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகின்றன.
ஆனால் மாநாடு படத்திலிருந்து, வாடினேன் வருந்தினேன் இனி திருந்தினேன் நாராயணா எனும் அளவுக்கு படப்பிடிப்புகளில் ஈடுபாட்டுடன் நடித்து வந்தார்.
வெங்கட் பிரபு இயக்கும் அந்த படத்தை சுரேஷ் காமாட்சி கிட்டத்தட்ட முப்பது கோடி செலவில் தயாரித்து வருகிறார். சிம்புவுக்கு மார்க்கெட் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வளவு பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கும் ஒரு தில் வேண்டும்.
தற்போது மாநாடு படப்பிடிப்பு கைவிடப்பட்டதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சுரேஷ் காமாட்சி ஒரு பேட்டியில், கூட்டமாக படம் எடுக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் என்ன செய்வதென்றே புரியவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்.
ஆனால் மாநாடு படம் கைவிடப்பட்டதாக பல்வேறு வதந்திகளை கிளப்பி விட்டனர். இதனால் டென்ஷனான சுரேஷ் காமாட்சி இனி இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.
ஒரே ஒரு சிம்பு படத்தை தயாரிக்க சுரேஷ் காமாட்சி இன்னும் என்ன எல்லாம் பிரச்சினைகளை சந்திக்க போகிறாரோ தெரியவில்லை.
