Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு வழியா முடிவுக்கு வந்த சிம்பு.. இந்த வாட்டி கண்டிப்பா சூட்டிங் நடக்குதுங்க.. நம்புங்க!
நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவந்த மாநாடு விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது நடக்க வாய்ப்பே இல்லை என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
அவர்கள் இதற்கு முன்னால் பாதிக்கப்பட்டவர்களாக கூட இருக்கலாம். இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சபரிமலை சென்று வந்த பிறகு சிம்பு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் குத்துச் சண்டை போடும் வீடியோ வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன்பு கூட சிம்புவின் சால்ட் அன்ட் பெப்பர் லுக் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் வெங்கட் பிரபு, லாரன்ஸை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க வதாக அறிவிப்புகள் வெளியானது.
அது மாநாடு தான் என சிலர் பற்ற வைத்தனர். ஆனால் அது வேற கதை என்று வெங்கட் பிரபு தெளிவுபடுத்தினார். தற்போது மீண்டும் மாநாடு படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் வெங்கட்பிரபு பொங்கல் முடிந்த பிறகு சூட்டிங் செல்லப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
ஏற்கனவே இந்த படத்தை நம்பி நொந்து போன சுரேஷ் காமாட்சி, படம் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என்று மாலை போட்டுக்கொண்டு மலையேறி நாளும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிம்பு மலைக்கு சென்று திரும்பி வந்தவுடன் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சபரிமலை நாதன் பிரச்சனைகளை தீர்த்து வைத்தால் நல்லது தான்.
