Tamil Cinema News | சினிமா செய்திகள்
போங்கயா நீங்களும் உங்க மாநாடும்.. ஊத்தி மூடிய வெங்கட் பிரபு.. சிம்பு பாவம்பா!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு(Silambarasan) நடிக்கும் மாநாடு படம் மிக வேகமாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில் திடீரென படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கான எந்த ஒரு சாத்தியக் கூறுகளும் ஏற்படாததால் தற்போது செம கடுப்பில் உள்ளாராம் வெங்கட் பிரபு.
அதுமட்டுமில்லாமல் 30 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. இதனால் அவரும் மிகவும் மன வருத்தத்தில் உள்ளாராம். தற்போதைக்கு மாநாடு படத்தை கைவிட்டு விடலாம் என முடிவெடுத்து விட்டார்கள்.
மாநாடு படத்தில் எடுக்கப்படும் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் தேவைப்படுவதால் தற்போதைக்கு மாநாடு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று விட்டார்களாம்.
இதனால் உடனடியாக சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி ஆகிய மூவரும் இணைந்து மாநாடு படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளையும் வைத்து குறைந்த பட்ஜெட்டில் மாநாடு படத்திற்கு முன்னரே ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
முக்கியமான விஷயம் என்றால் இந்த படத்தில் யாருமே சம்பளம் வாங்காமல் நடிக்கிறார்கள் எனவும், படம் வெளியாகி வியாபார ரீதியாக வெற்றி பெற்றால் அதிலிருந்து பங்கு பிரித்துக் கொள்ளலாம் எனவும் பேசப்பட்டுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.
