மீண்டும் காதல் உறவை புதுப்பித்த சிம்பு.. கிரீன் சிக்னல் கிடைத்ததால் விரைவில் டும் டும் டும்

சிம்பு தனது 19 வது வயதில் சினிமா துறையில் ஹீரோவாக அறிமுகமானார். கிட்டத்தட்ட 12 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தினார். இவர் 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தந்தை டி ராஜேந்தர் போலவே பன்முகத்திறமை கொண்டவர்.

2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோவாக நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தம், அலை, கோவில், குத்து என அடுத்தடுத்து இவருக்கு தொடர்ந்து படங்கள் வர ஆரம்பித்தது. படங்கள் வருதோ இல்லையோ சிம்பு மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்தது.

வல்லவன் படத்தில் சிம்பு நயன்தாராவுடன் நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்க தொடங்கினர். அவர்களும் அதற்கு ஏற்றார் போல் ஒன்றாக ஊர் சுற்றி வந்தனர். அதன் பின்னர் இருவரும் இருக்கும் நெருக்கமான போட்டோக்களை சிம்பு வெளியிட்டதால் அந்த காதல் முறிவடைந்தது.

2015ஆம் ஆண்டு வெளிவந்த வாலு படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி இருவருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி காதலில் விழுந்தனர். அதன் பின்னர் மறுபடியும் இந்த உறவு நீடிக்கவில்லை இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர்.

கிரீன் சிக்னல் கிடைத்ததால் விரைவில் டும் டும் டும்

கடைசியாக சிம்பு, ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வாலுடன் காதலில் விழுந்தார். இருவரும் இப்பொழுது ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். அது மட்டும் இன்றி டேட்டிங் உறவில் இருக்கின்றனராம். இருவர் வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டி விட்டனர். ஏற்கனவே சிம்புவிற்கு நிச்சயம் காதல் திருமணம் தான் என்று டி ஆர் கூறி வந்த நிலையில் இப்பொழுது உண்மையாகி உள்ளது.

- Advertisement -spot_img

Trending News