Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால் அடுத்த லெவல் போயிருப்பார்.. ஆனால் அதையும் கோட்டை விட்டார்
சிம்பு என்றாலே வம்பு தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனால் சிம்புவை வைத்து படம் எடுக்க பெரிய இயக்குனர்களே ஆசைப்படுவது தான் அதிர்ச்சியாக உள்ளது.
மாநாடு படத்தில் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்து செல்லும் சிம்புவைப் பார்த்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை வரிசை கட்டி நிற்பது தான் கோலிவுட் சினிமாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மூன்று வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஒரு நடிகருக்கு இப்படி ஒரு வரவேற்பா என மற்ற நடிகர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவுக்கு பெரிய இயக்குனர்கள் சிம்புவை வைத்து இயக்க ஆசைப்படுகிறார்கள்.
அதேசமயம் சிம்புவை இயக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர். இப்போது இருப்பதைப் போல சில வருடங்களுக்கு முன் இருந்திருந்தால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து இருப்பார்.
அதிலும் 2011 ஆம் ஆண்டு வெளியான கோ படத்தில் சிம்பு நடித்திருந்தால் இன்று அவரோட ரேஞ்சே வேறயாம். ஆம். முதன்முதலில் கோ படத்தின் கதையை கே வி ஆனந்த் சிம்புவிடம் தான் சொன்னாராம்.
வழக்கம்போல் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டதால் தான் அந்த கதை ஜீவாவிடம் சென்று அது ஜீவாவின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது.
இப்படி சிம்பு தவறவிட்டது கொஞ்ச நஞ்சமல்ல.. இனியாவது புரிந்து தன்னுடைய இமேஜை உயர்த்திக் கொள்வாரா என்று பார்ப்போம்.
