fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு தலை அசைத்தால் இரண்டாம் பாகம் உருவாகும்.. மார்க்கெட் இல்லாத நடிகருக்கு எவ்வளவு டிமாண்ட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு தலை அசைத்தால் இரண்டாம் பாகம் உருவாகும்.. மார்க்கெட் இல்லாத நடிகருக்கு எவ்வளவு டிமாண்ட்

என்னதான் சிம்புவைப் பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக சொன்னாலும் அவருக்கு இருக்கும் மவுசு குறையவே இல்லை என்பதே உண்மை. கடந்த மூன்று வருடங்களாக சிம்புவின் படங்கள் வராத நிலையிலும் அவரை விட்டு அவரது ரசிகர்கள் செல்லவில்லை. இத்தகைய ரசிகர்களை பெற்றதற்கு சிம்பு உண்மையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.

ரசிகர்கள் மட்டுமின்றி பல இயக்குனர்களின் ஃபேவரைட் நடிகராகவும் சிம்பு இருந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிம்புவின் மீது படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என பலர் குற்றம் சாட்டினால் அவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் சிம்புவுக்கு முக்கியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தவர்தான் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பெரிய வெற்றியைப் பெற்றது. அதேபோல் அடுத்து இவர்கள் கூட்டணியில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படமும் கௌரவமான வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கௌதம்மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புவதாகவும் சிம்பு ஓகே சொன்னால் உடனே அதற்கான கதையை தயார் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் சிம்பு ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top