3 வருடம் கழித்து நேரடியாக OTTக்கு வரும் சிம்பு படம்.. கஞ்சா பஞ்சாயத்தை பார்த்த படமாச்சே!

சிம்பு தற்போது படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும் ஒரு சில வருடங்களுக்கு முன்புவரை தயாரிப்பாளர்களுக்கு பலவகையில் தொல்லை கொடுத்துள்ளார். அந்த வகையில் அவரால் சிரமத்திற்குள்ளான படம் ஒன்று நேரடியாக OTTயில் வெளியாக உள்ளதாம்.

ஒரு காலத்தில் சிம்புவை வைத்து படம் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த படம் முடியுமா, முடியாதா என்ற சந்தேகத்திலேயே தொடங்குவார்கள். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களை படுத்தி எடுத்துள்ளார்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக சிம்புவின் நடவடிக்கைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருவது, தயாரிப்பாளர்களுக்கு எந்தவித தொந்தரவும் தராமல் இருப்பது என அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

தற்போது சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. ஆனால் ரிலீஸ் தேதி குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில் சிம்பு மற்றும் அவரது முன்னாள் காதலி ஹன்சிகா நடிப்பில் உருவான மகா திரைப்படம் மூன்று வருடங்கள் கழித்து நேரடியாக ஓடிடி ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இருவரின் காதல் முறிவுக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இருவரும் இணைந்து மகா படத்தில் நடித்து வந்தனர். இது ஹன்சிகாவின் 50வது படமும் கூட. இந்த படத்தின் அறிவிப்பு வெளியிட்ட போஸ்டரில் ஹன்சிகா கஞ்சா பிடிப்பதுபோல் இருந்தது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

simbu-hansika-maha-cinemapettai
simbu-hansika-maha-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்