வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முயலன் போல் கொம்பு தேனுக்கு பேராசையோடு திரியும் சிம்பு.. உள்ளதையும் நொல்லையாக்கிய எஸ் டி ஆர்

கொம்புத்தேன் மலையின் உச்சத்தில் இருக்கும் தேன் கூட்டிலிருந்து கிடைக்கும். அதை முயற்சி செய்தால் தான் ஒருவரால் எடுக்க முடியும், இதற்கு தான் முயலன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா என்று ஒரு பழமொழியை கூறி வருகிறார்கள். அதை போல் சிம்பு கைவசம் எந்த ஒரு படங்கள் இல்லாத போதிலும் பேராசை பிடித்து திரிகிறார்.

சிம்புவிற்கும் வேல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஐசரி கணேசிற்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது. அதாவது சிம்பு அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு, கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருவது தான் இவர்களுக்குள் நீண்ட நாட்களாக இருக்கும் பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து கோர்ட் வரை சென்றது.

ஒரு கட்டத்தில் சிம்பு பணத்தை திரும்பத்தருவதாகவும் ஒப்புக்கொண்டார். இருப்பினும் இப்பொழுது கால் சீட் கொடுப்பதாகவும் கூறி வருகிறாராம். இதனால் ஐசரி கணேஷ் செய்வதறியாது முழித்து வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக சிம்பு கேட்ட சம்பளத்தால் மொத்தமாய் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் ஐசரி கணேஷ்.

சிவகார்த்திகேயன், தனுஷ் இருவரும் சம்பளத்தை உயர்த்தி விட்டார்கள். சக நடிகர்கள் உயர்த்தியதால் இப்பொழுது சிம்புவும், ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்டு தயாரிப்பாளர்களை அதிர வைத்துள்ளார். இதனால் அவரிடம் சிக்கிக் கொண்டு முழிப்பது ஐசரி கணேஷ் தான்.

தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரும் ராயன் மற்றும் அமர போன்ற ஹிட் படங்கள் கொடுத்துள்ளனர். ஆனால் சிம்பு மாநாட்டுக்கு பின் மூன்று வருடங்களாக எந்த ஹிட் படங்களும் கொடுக்கவில்லை. இவர் சம்பளத்தை உயர்த்துவது நியாயமில்லை. முயலன் போல் கொம்பு தேனுக்கு பேராசைப்படுகிறார் சிம்பு.

Trending News