பழைய நடிகை வேணுமா? புதுநடிகை வேணுமா? சிம்புவுக்கு போன் போட்ட கௌதம் மேனன்

மாநாடு படத்திலிருந்து சிம்பு சமர்த்துப் பிள்ளையாக வலம் வரத் தொடங்கி விட்டார். தயாரிப்பாளர்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு ஒழுங்காக படப்பிடிப்புகளை முடித்து கொடுத்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் முன்னர் போல் நினைத்த நேரத்தில்தான் படப்பிடிப்பு வருவேன் என அடம் பிடிக்காமல் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சொல்லும் நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்து வந்து விடுகிறார் சிம்பு.

இந்த அளவுக்கு குட் பாயாக மாறியுள்ள சிம்பு மீது தற்போது கோலிவுட் தயாரிப்பாளர்கள் பார்வை அளவுக்கு அதிகமாக விழுந்துள்ளது. இதனால் அவரை வைத்து அடுத்தடுத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர்.

அந்தவகையில் அடுத்ததாக சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு நதிகளில் நீராடும் சூரியனே என்ற படம் உருவாக உள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் தான் என்கிறார்கள் கௌதம் மேனன் வட்டாரங்கள்.

இது ஒருபுறமிருக்க தற்போது நதிகளில் நீராடும் சூரியனே படத்திற்காக சிம்புவுக்கு ஜோடியாக திரிஷாவை போடலாமா என்கிறது தயாரிப்பு நிறுவனம். ஆனால் கௌதம் மேனனோ எனக்கு ரிது வர்மா தான் ஃபேவரைட், அவர் தான் வேண்டும் என அடம் பிடிக்கிறாராம்.

trisha-cinemapettai
trisha-cinemapettai

ரிது வர்மா சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களுக்கு முன்பே கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என சிம்புவுக்கு லிஸ்ட் அனுப்பியுள்ளதாம் படக்குழு. அவர் யாரை ஓகே பண்ண போகிறாரோ?

ritu-varma-cinemapettai
ritu-varma-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்