fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு மாதிரி யாரும் வரமாட்டாங்க.. காக்கா பிடிக்கும் கௌதம் மேனன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு மாதிரி யாரும் வரமாட்டாங்க.. காக்கா பிடிக்கும் கௌதம் மேனன்

சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி வெற்றியும் பெற்றன. சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் ஒன்று வெளியானது.

2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தொடர்ச்சியாக இந்த குறும்படம் அமைந்தது. சிம்பு ரசிகர்கள் இடையே இந்த குறும்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் நெட்டிசன்கள் இடையே பெரும் கேலி கிண்டல்களுக்கு உள்ளானது.

திருமணமான திரிஷாவிடம் சிம்பு, நீ வேண்டும் என கேட்பதைப் போல அந்த காட்சி அமைந்திருந்தது. இது கள்ளக்காதலை ஊக்குவிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதால் கௌதம் மேனனுக்கு சமூக வலைதளங்களில் பெரிய அளவு ஆதரவு கிடைக்கவில்லை.

இருந்தாலும் கார்த்திக் டயல் செய்த எண் எனும் குறும்படத்தை எப்படி டைரக்ட் செய்தார் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவாக வெளியிட்டு உள்ளார். அதில் மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெரிகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படங்களும் சமீபகாலமாக பெரிய அளவு ஹிட் அடிக்கவில்லை. ஆதலால் எப்படியாவது சிம்புவை வைத்து மீண்டும் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என அச்சாரம் போடுகிறாராம்.

விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் தயாரிப்பாளராக வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் களம் இறங்க உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

Continue Reading
To Top