சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் இவர்தான், ஆனால் நல்ல ரசிகர்களை பெற்றிருக்கார் நடிகர் சிம்பு ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வந்தார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார், தனது கருத்துகளையும் ட்விட்டரில் தெரிவித்தார்.

சிம்பு தனக்கென நல்ல ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். அவ்வபோது அவர்களிடம் பேஸ்புக், டுவிட்டரில் கலந்துரையாடுவார்.

அந்த வகையில் சமீப காலமாக இவர் எந்த ஒரு சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்துவது இல்லை, தற்போது தான் சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறுவதாக அவரே கூறியுள்ளார்.

ஏனெனில் சமூக வலைத்தளம் முழுவதும் யாரையாவது யாரோ திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள், அதனால், அது வேண்டாம் என்று அவரே முடிவு எடுத்துள்ளாராம். இந்த முடிவு இவருடைய ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.