அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய படம், கை விட்ட சிம்பு.. மக்களே மறந்ததால் வந்த வம்பு

சிம்புக்கு மிகப்பெரிய கமபேக் கொடுத்த படம் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய லாபத்தை அடைந்தது. மேலும் சிம்புவின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமும் மாநாடு தான். இந்நிலையில் மாநாடு படத்திற்கு முன்பே சிம்பு இரண்டு, மூன்று படங்களில் கமிட்டாகி இருந்தார்.

ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் படம் தள்ளிப் போய்க்கொண்டே வந்தது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்திருந்தார்.

மாநாடு படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது படத்திற்காக சிம்பு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாநாடு படத்திற்கு முன்பே சிம்பு கால்ஷீட் கொடுத்த படம் தான் கொரோனா குமார். இப்படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கயுள்ளார் என கூறப்பட்டது.

மேலும் மாநாடு படத்திற்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் உயர்ந்துள்ளதால் இப்படத்திற்கு பெரும் சம்பளத்தை சிம்பு எதிர்பார்க்கிறார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வந்தது. ஆனால் இப்பொழுது கொரோனா குமார் படம் கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இப்படம் கொரோனா நகைச்சுவையாக எடுக்க திட்டமிட்டிருந்தனர். அப்போது கொரோனா அச்சத்தால் மக்கள் பீதியில் இருந்ததால் இப்படம் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கொரோனாவை பற்றி மீம்ஸ்கள் போட்டு அதன் மேல் உள்ள பயத்தை போக்கிவிட்டானர்.

மேலும் தற்போது இந்த நோயை மக்களே மறந்துவிட்டனர். இதனால் தற்போது இந்தப் படம் எடுத்தால் அந்த அளவுக்கு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கொரோனா குமார் படம் கைவிடப்பட்டுள்ளது. மேலும் சிம்பு, லிங்குசாமி இயக்கத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்