கோலிவுட் திரையுலகில் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருக்கும் தனுஷ்-சிம்பு, தொழிலளவில் கடும் போட்டியாளர்களாக உள்ளனர். இருவரையும் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது தனுஷ், சிம்பு ஆகிய இருவரும் தற்செயலாக ஒரு படத்தில் இணைந்துள்ளனர். தெலுங்கில் சாய்தரம் தேஜ் நடித்து வரும் ‘திக்கா’ படத்திற்காக சமீபத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடினார் என்பதையும் அந்த பாடல் சமீபத்தில் வெளியானதும் தெரிந்ததே.

இந்நிலையில் இதே படத்திற்காக தற்போது சிம்புவும் ஒரு பாடலை பாடியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன், தனுஷ், சிம்பு ஆகிய இருவரையும் ஒரே படத்தில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.