fbpx
Connect with us

Cinemapettai

முதலுக்கே மோசம் பண்ணிய சிம்பு.. வேதாளம் முருங்கமரம் ஏறிடுச்சோ என கலக்கத்தில் தயாரிப்பாளர்

str

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதலுக்கே மோசம் பண்ணிய சிம்பு.. வேதாளம் முருங்கமரம் ஏறிடுச்சோ என கலக்கத்தில் தயாரிப்பாளர்

ஒரு வழியாக சிம்பு நடிப்பில் மாநாடு படம் தொடங்கிவிட்டது என பெருமூச்சு விடும் ரசிகர்களுக்கு பேரிடியாக வந்து விழுந்தது ஒரு செய்தி. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு படம் பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்றவர்களை தவிர மற்ற அனைவருமே வந்திருந்தனர். படத்தின் முதல் காட்சியில் சீமான் கேமராவை பிடிக்க சேரன் கிளாப் அடிக்க அட்டகாசமாய் தொடங்கியது மாநாடு படம்.

முதல் காட்சி காபி ஷாப் காட்சியாக இருந்தது. இந்நிலையில் சிம்புவின் பழைய மன்மத வேலை ஒன்று எட்டிப் பார்த்துள்ளது. சபரிமலை சென்று வந்த பின்பு சிம்பு திருந்தி விட்டார் என அவரது ரசிகர்கள் சிம்புவின் பிறந்த நாளன்று அவரது வீட்டுக்குச் சென்று கொண்டாட்டம் போட்டது அனைவரும் அறிந்ததே.

ஆனால் மாநாடு படப்பிடிப்பின் முதல் நாளே லேட்டாக வந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் சிம்பு. அதிகாலை தொடங்க இருந்த காட்சியை சிம்பு 3 மணி நேரம் தாமதம் செய்ததால் லேட்டாக தொடங்கியது. இப்படியே போனால் சுரேஷ் காமாட்சி தலையில் துண்டு தான் போட வேண்டும் என பலர் ஏத்தி விடுகின்றனர்.

இருந்தும் சிம்புவின் மீது உள்ள அபார நம்பிக்கையால் மாநாடு படம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என தயாரிப்பு தரப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top