Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்தடுத்து பெரிய படத்தில் சிம்பு.. அதிரடி காட்டுவது சரிதான், ஆனால் ஷூட்டிங் போவீங்களா?
தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் மொத்தமாக குறை சொல்லும் ஒரே ஹீரோ நம் சிம்புதான். ஆனால் விசாரித்து பார்த்தால் தயாரிப்பாளர்கள் தரப்பு சிம்புவிடம் பண விஷயத்தில் கொஞ்சம் கெடுபிடி காட்டியதால் தான் சிம்பு அவர்களின் படங்களுக்கு டிமிக்கி கொடுத்ததாக தெரிகிறது. சிம்புவை அனுசரித்துச் செல்லும் இயக்குனர்கள் யாரும் அவர் மீது இப்படி ஒரு குற்றம் சுமத்தியது இல்லை.
சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் தொடங்கும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
மாநாடு படமே பலமுறை டிராப் செய்யப்பட்டு தற்போது தான் மெல்ல மெல்ல ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்நிலையில் சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்க ரெடியாகி விட்டார் மணிரத்னம். தற்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகமாக பிரித்து முதல் பாகம் ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு சிறிது கேப் எடுத்துக் கொண்டு தான் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார். இதற்கிடையில் சிம்புவை வைத்து அழகான லவ் ஸ்டோரி ஒன்றை இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சிம்பு ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
