சிம்பு நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும் இந்த டிரைலரில் அவர் தனது எதிர்ப்பாளர்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீப் பாடல் பிரச்சனை ஏற்பட்டபோது சிம்புவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய மாதர் சங்கங்கள் மற்றும் லெட்டர்பேடு கட்சிகள் அண்மையில் நடந்த சுவாதி கொலையின்போதோ அல்லது வினுப்பிரியாவின் தற்கொலையின்போதோ எவ்வித போராட்டத்திலும் ஈடுபடவில்லை.

அதேபோல் சிம்புவுக்கு இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் உள்பட யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனவே இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் டீசர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here