Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஈஸ்வரன் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் இதுதான்.. வெளிவந்த சீக்ரெட்

சிம்புவின் மாற்றம் தான் தற்போது தமிழ் சினிமாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

30 நாளில் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு தற்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பு கலந்துகொண்டுள்ளார்.

படபிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வராமல் தயாரிப்பாளர்களை நோகடித்த சிம்பு அதற்கு பரிகாரமாக தற்போது குறித்த நேரத்தில் படப்பிடிப்புகளை முடித்துக் கொடுத்து அனைவரையும் உற்சாகப்படுத்தி விட்டாராம்.

அதிலும் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம்தான் அவருக்கு கம்பேக் படமாக அமையும் என பெரிதும் நம்பி இருக்கிறாராம்.

ஈஸ்வரன் படத்தில் சிம்பு வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பழனி மலையை சுற்றிக் காட்டும் டூரிஸ்ட் கைடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். மேலும் சிம்புவிற்கு பழனி முருகன் என்ற பெயர் தான் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

மேலும் சிம்புவுக்கு தந்தையாக பாரதிராஜா நடித்துள்ளார். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான பாசப் போராட்டம்தான் படம் என்கிறார்கள்.

str in eeswaran

Continue Reading
To Top