fbpx
Connect with us

Cinemapettai

இந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்! சேனாதிபதிக்கே சவால்.!

News | செய்திகள்

இந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்! சேனாதிபதிக்கே சவால்.!

இந்தியன்-2 பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது. இப்படத்தின் தகவல் அனைத்தும் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இப்படத்தில் சிம்பு என்ன கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதை வெளிவந்துள்ளது.

indian2-new-movie

indian2

இப்படத்தில் சந்துரு கேரக்டரில் கமலஹாசனை தொடரப்போவதாகவும் மற்றும் சேனாதிபதியின் பேரனாக சிம்பு நடிக்க போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் படத்தின் மூலம் சேனாதிபதி என்ற கேரக்டர் மக்கள் மனதில் மிகத்துல்லியமாக இடம்பெற்றுவிட்டது. இந்தியன்-2 விலும் சமூகத்தில் நடக்கும் அனைத்து  அவலங்களையும் வெளிக் கொண்டுவர இருக்கும் கதையாக அமைக்கப்பட்டிருக்கும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

இந்த படத்தின் மூலம் கமலஹாசன் மட்டும் சிம்பு முதல் முறையாக தமிழ் சினிமாவில் இணைந்து நடிக்கின்றனர்.  இது சிம்புவின் சினிமா வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மைல்கல் என்றே சொல்லலாம். அவர் நடித்து வரும் ஒரு சில படங்கள் பிரச்சனையில் போய் முடிவதால் அதைக் கண்டு துவண்டு போகாமல் தனது தனித்திறமையை தமிழ் சினிமா ரசிகர்களுக்காகவே அர்ப்பணித்துள்ளார்.

தென்கொரியாவின் நடிகை மற்றும் பாடகியான  #SuzyBae கமலஹாசனுடன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளார். இதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்வானில் வரும் ஜனவரி 18ம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top