சிம்பு கேட்கிற சம்பளத்தை கொடுக்க முடியாது.. தயாரிப்பாளர் சரி சொல்லியும் முட்டுக்கட்டை போட்ட இயக்குனர்

சிம்பு தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி உள்ளார். தொடர் தோல்விகளை கொடுத்து வந்த சிம்புக்கு மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் வெற்றி பெற்றது.

தற்போது சிம்பு பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து சிம்பு வெற்றி படங்களை கொடுத்து வருவதால் தனது சம்பளத்தை அதிகப்படியாக உயர்த்தி உள்ளார். இவரின் சம்பளத்தை கேட்டு தயாரிப்பு நிறுவனமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

Also Read : செம்ம பிஸி, அடுத்தடுத்து சிம்பு உறுதி செய்த 6 படங்கள்.. 2025 வரை என்னோட ராஜ்ஜியம்தான்

இந்நிலையில் புதிய தயாரிப்பு நிறுவனத்துடன் சிம்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதாவது உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கே ஜி எஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் சிம்பு படத்தை தயாரிக்க உள்ளது. தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தை தயாரிக்கிறது.

இதற்கு முன்னதாக கன்னட மொழியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற காந்தாரா படத்தையும் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு புதிய படம் உருவாக உள்ளது.

Also Read : பத்து தல முடிச்ச சிம்பு.. 12 வருடங்களுக்கு பின் கையில் எடுத்த சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம்

இந்த படத்திற்காக அதிகப்படியான சம்பளத்தை சிம்பு கேட்டுள்ளார். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் தயாராகி உள்ளது. ஆனால் இயக்குனர் சுதா கொங்கரா தலையிட்ட சிம்புவின் சம்பளத்தை குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏனென்றால் ஒரு இயக்குனருக்கு படத்தின் பட்ஜெட் எவ்வளவு நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். இதை கருத்தில் கொண்டு சிம்புவிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி சுதா கொங்கரா முட்டுக்கட்டை போட்டதால் தற்போது தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Also Read : 12 வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி.. சிம்புவுக்கு ஜோடியாகும் இளவரசி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்