பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பஞ்சாயத்து காரணமாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் விட்டால் போதுமென்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். நான் இனிமேல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று கூறிவிட்டு அந்த வீட்டை விட்டு கிளம்பி விட்டார். இதனால் அந்த இடத்தை நிரப்புவதற்காக சரியான ஆளை அங்கு நிறுத்த வேண்டும் என்பதற்காக தேடிக் கொண்டிருக்கும்போது, அதான் நம்ம சிம்பு இருக்காரே என்று கூறி சிம்புவை அங்கே நிறுத்தி வைத்தனர். அவரும் அவர் பங்கிற்கு ஸ்டைலாக வந்து தொகுத்து வழங்க ஆரம்பித்து இருக்கிறார்.
அப்படி வார இறுதி நாட்களில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை சந்திக்கும் சிம்பு, அவர்களோடு கலகலப்பாக உரையாடினார். அப்போது தலைவா… வா தலைவா.. வா தலைவா என பிக்பாஸ் வீட்டில் அவரை கொண்டாடினார்கள். போட்டியாளர்கள் அனைவரும் சிம்புவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார்கள்.
சிம்புவும் வழக்கமான தன்னுடைய சிரிப்போடு அத்தனை பாராட்டுகளையும் வாங்கிக்கொண்டு அவர்களோடு கலந்துரையாடிக் கொண்டிருந்தார். போட்டிக்கான அனைத்து விதிகளையும் போட்டி குறித்தான விவாதங்களையும் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென சிம்புவிடம் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு கேள்வியை முன் வைத்தனர்.
அது ஒன்றும் புதிதான கேள்வி அல்ல சிம்பு எங்கு சென்றாலும் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் கேட்கப்படும் கேள்விதான் அது. சிம்புவின் வாழ்க்கையில் கல்யாணம் என்று ஒன்று இருக்குதா இல்லையா நம்பலாமா நம்பக்கூடாதா நீங்கள் எப்பொழுது கல்யாணம் செய்வீர்கள், பெண் பார்த்தீர்களா எப்படிப்பட்ட பெண் தேடுகிறீர்கள் என்று கேட்டு சிம்புவை ஒரு நிமிடம் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி விட்டனர். நானா பண்ணிக்க மாட்டேன் என்று சொல்கிறேன் நடக்க மாட்டேங்குதே கல்யாணம் என்று கூறுவது போல கூனிக் குறுகிப் போய் சிம்பு நின்று கொண்டிருந்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக குத்திய குத்தில் மனுஷன் சாய்ந்து விடாமல் கெத்தாக நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, தாமரை பேசிய பேச்சில் பாவம் உடைந்து போய் விட்டார். தம்பி கல்யாணம் செய்து கொள்ளுங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொன்னவுடன் சிம்புவிற்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் புன்னகையோடு கடந்து விட்டார். உண்மையில் அவர் மனதில் என்ன ஓடி இருக்கும் என்றால் நீ எல்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆயிட்டேன் பாத்தியா என்றுதான் தோன்றி இருக்கும்.
பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பின்பு போட்டியாளர்களை சிம்பு வச்சு செய்யப்போகிறார் என்று நினைத்தால் கடைசியில் சிம்புவை தான் போட்டியாளர்கள் நன்றாக வச்சு செஞ்சு கொண்டிருக்கின்றனர். இதனால் மனமுடைந்த சிம்பு அட போங்கடா என்ன வாழ்க்கைடா இது என்று சொல்வது போல அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டுக் கிளம்பினார்.