Tamil Cinema News | சினிமா செய்திகள்
14 வருடங்களுக்கு பிறகு சிம்புவின் எடுக்கும் புதிய அவதாரம்.. மன்மதன், வல்லவன் எல்லாம் ஓரமா போ!
பன்முகத் திறமைகள் கொண்ட நடிகர்கள் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியம் தான். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிம்பு.
என்னதான் சிம்புவை பற்றி தயாரிப்பாளர்கள் தவறாக பேசினாலும் அவருடைய மார்க்கெட் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதைவிட முக்கியமாக அவரது ரசிகர்கள் அவரை விட்டுக் கொடுக்காமல் இருக்கின்றனர்.
அந்த வகையில் நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்த சிம்பு தற்போது மீண்டும் வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இதனை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மாநாடு படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்பு வெங்கட்பிரபு சுரேஷ் காமாட்சி கூட்டணியில் ஒரு சிறிய பட்ஜெட் படம் ஒன்று தயாராக உள்ளது. இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு சிம்பு பழையபடி இயக்குனராக களமிறங்க இருக்கிறாராம்.
மன்மதன், வல்லவன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சிம்பு அதன்பிறகு வாலிபன் எனும் படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் பைனான்ஸ் பிரச்சினையால் பாதியில் நின்றது.
இடையில் இங்கிலீஷ் படம் ஒன்றை இயக்க போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதுவும் அறிவிப்போடு சென்றது. ஆனால் அடுத்ததாக ஒரு படத்தை கண்டிப்பாக இயக்க வேண்டும் என ஆர்வமாக இருக்கிறாராம்.
அப்படியே மன்மதன், வல்லவன் போன்ற படங்களை எடுங்க சார்!
