உன் நண்பன் யார் என்று சொல் நீ எப்பேர்ப்பட்டவன்ணு நான் சொல்கிறேன் என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் பல விஷயங்கள் நடந்தும் இருக்கிறது. தீயவர் பழக்கம் தீமையில் தான் முடியும் என்பது போல் தீய நட்பால் இடையில் சிம்புவின் சினிமா கேரியரே ஆட்டம் கண்டது.
இப்பொழுது சிம்பு தன்னுடைய நண்பர்கள் பல பேரை வடிகட்டி விட்டு குறிப்பிட்ட ஆட்களுடன் தான் நட்பு பாராட்டி வருகிறாராம். தக்லைஃப் படத்தில் முழு மூச்சில் இறங்கி அடிக்கிறார். மணிரத்தினத்தின் செல்ல பிள்ளையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். அதிகாலை சூரியன் வரும் முன் சூட்டிங் வந்து விடுகிறாராம்.
2005 தொட்டி ஜெயா படத்திற்கு பின்னர் சிம்புவின் சினிமா கேரியர் ஆட்டம் கண்டது. அதன் பிறகு இவர் மீது ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் கள். சேராத நட்பு வட்டாரங்களில் சிக்கிக் கொண்டு கமிட் செய்த படங்களில் நடிக்க வருவதற்கு பெரிதும் துன்பம் கொடுத்திருக்கிறார்.
வலது கரமாக அரண் போல் இருக்கும் ஒற்றைத் தோழன்
2006 முதல் 2010 வரை இவர் நடித்தது வெறும் ஐந்தே படங்கள் தான். அந்த படங்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை இதனால் சினிமாவில் சிம்புவின் கேரியர் அவ்வளவுதான் என்று பேசப்பட்டது. பல நடிகைகளுடன் காதல் உறவில் இருந்தார் சிம்பு.
இப்பொழுது மாநாடு படத்துக்குப் பின் தங்க கம்பியாக மாறிவிட்டார். ஒழுங்காக சூட்டிங் வருவதும் தேவையில்லாத நட்பு வட்டாரங்களை ஒதுக்கி வைப்பதுமாக, நல்ல பிள்ளையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது இவரிடம் இருப்பது ஒரே ஒரு நட்பு மட்டும் தான். நடிகர் மகத்தை மட்டும் தான் இப்பொழுது இவர் நண்பராக வைத்துள்ளார்.
- சிம்புவுக்கு வர்ற படத்தை எல்லாம் தட்டிப்பறிக்கும் 2 ஹீரோக்கள்
- சிம்பு போல் கவினுக்கும் உலக நாயகன் கொடுத்த அல்வா
- சிம்புவையும் தனுசையும் காலி பண்ணும் SK