விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 சீசன்களையும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொடக்கத்தில் தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன், அதன் பிறகு கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
இதற்கு விக்ரம் படப்பிடிப்பிற்கு கமல் சரிவர வராததாலும், அந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை அதிக தொகை கொடுத்து வாங்கிய ஹாட்ஸ்டார் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமலை கைகழுவி விட்டதாக சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட கமலுக்கு தீனி போட முடியவில்லை என்றும் ஹாட்ஸ்டார் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறதாம்.
அதன் பிறகு தற்போது லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு கமலுக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். என்னதான் கமல் அளவுக்கு சிம்புவால் போட்டியாளர்களிடம் கறாராக நடந்து கொள்ள முடியாவிட்டாலும், சிம்புவின் பேச்சு மற்றும் வசீகரா முக பாவனையால் ரசிகர்களை சுண்டி இழுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ரசித்துப் பார்க்க வைக்கிறது.
எனவே கமல் இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் பின்னடைவை சந்திக்கும் என கூறிய ஒரு சிலர்களின் எண்ணம் தற்போது உடைப்பட்டுள்ளது. அத்துடன் ரசிகர்களிடமும் போட்டியாளர்களிடமும் அண்ணன் தம்பி போல் சகஜமாக பேசிப் பழகும் சிம்புவிற்கு அமோக வரவேற்பையும் ஆதரவையும் ரசிகர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாள் மீதமிருக்கும் நிலையிலும், பத்து தல என்ற படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதால் அதற்கு தாடி முடி வளர்க்கவும், உடல் எடையை ஏற்றுவதற்காக படக்குழுவினர் கொடுத்த கால அவகாச நாட்களில், திடீரென்று சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமிட்டாகி இருப்பது அந்த படக்குழுவினர்களுக்கு தூக்கிவாரிப் போட்டுள்ளது.
இருப்பினும் பிக்பாஸ் மற்றும் படங்கள் இரண்டிலும் சிறப்பாக பங்கெடுக்க சிம்பு பிளான் போட்டு செயல்பட திட்டமிட்டிருக்கிறாராம். எப்போதுமே கமல் இளைய தலைமுறை வரும் போது தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்து விடுவார் அப்படிதான் ஆஸ்கார் விருதையும் விட்டுக் கொடுத்தார் கமல்.