சிம்பு தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், எழுத்தாளர் என பன்முகமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் இசையமைப்பாளராகவும் உருமாறியிருக்கிறார். சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் இவர் இசையமைப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.

இப்படத்தின் பாடல் பதிவில் பிசியாக இருக்கும் சிம்பு, சமீபத்தில் ஒரு பாடலுக்கு அனிருத்தை பாட வைத்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிம்புவும், அனிருத்தும் ஏற்கெனவே நிறைய படங்களில் பாடல் பாடியுள்ளனர்.

ஆனால், சிம்பு இசையமைப்பில் அனிருத் பாடுகிறார் என்பதை பார்க்கும்போது புதுமையாக இருக்கிறது. அந்த பாடல் ரொம்பவும் அழகாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிறப்பான பாடல் பாடிக்கொடுத்த அனிருத்துக்கு சிம்பு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

சிம்புவும்-அனிருத்தும் ஏற்கெனவே ’பீப் பாடல்’ பிரச்சினையில் சிக்கி ரொம்பவும் அவஸ்தைபட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.