Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவுடன் மிங்கிலான சனம் ஷெட்டி.. அப்போ பிக்பாஸ் தர்ஷன் கதி?
சிம்பு தமிழ் சினிமாவில் அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சினிமா உலகமே அவரை பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கும். முக்கியமாக சர்ச்சை விஷயங்களில் சிம்புவின் பெயர் இடம்பெறாமல் இருக்காது.
அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் தர்ஷன். இவர் சனம் ஷெட்டி என்ற நடிகையை காதலித்து வந்தது செய்து அனைவரும் அறிந்ததே. பிறகு தர்ஷன் பிக்பாஸ் வீட்டினுள் நடிகை ஷெரினை ஒருதலையாக காதலித்தார்.
இது தெரிந்த சனம் ஷெட்டி, தர்ஷனுடனான காதலை முறித்துக் கொள்வதாக வீடியோ வெளியிட்டார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சுற்றி வந்தனர். ஆனால் சில நாட்களாக சனம் செட்டி நடிகர் சிம்புவுடன் வலம் வருகிறார்.

simbu-sanam-shetty
மேலும் சிம்பு எங்கு சென்றாலும் அங்கு சனம் ஷெட்டி இருப்பதால் தர்ஷன் காதல் முறிந்து விட்டதா என பிக்பாஸ் ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர். இந்த செய்தி தமிழ் சினிமா உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மன்மதன் இஸ் பேக்!
