fbpx
Connect with us

மீண்டும் சிம்பு-கார்த்தி மோதல்

News | செய்திகள்

மீண்டும் சிம்பு-கார்த்தி மோதல்

simbu-karthiசிம்பு நயன்தாரா நடிப்பில் தயாராகியிருக்கும் இதுநம்மஆளு படத்தின் பாடல்கள் பிப்ரவரி 3ஆம் நாள் வெளியானது. படத்தை பிப்ரவரி 14 காதலர்தினத்தன்று வெளியிட முதலில் திட்டமிட்டதாகச் சொல்லப்பட்டது.

தற்போது படத்தை மார்ச் 25 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. படத்தில் இன்னும் இரண்டுபாடல்களைப் படமாக்கவேண்டும் என்பதற்காக டி.ராஜேந்தர் முயன்று கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அது தொடர்பான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எப்படியும் பாடல்களைப் படமாக்கி மார்ச் 25 இல் படத்தை வெளியிட்டுவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது

அதேதேதியில் கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா உட்பட பலர் நடித்திருக்கும் தோழா படத்தையும் வெளியிட முடிவுசெய்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகவிருப்பதால் சொன்ன தேதியில் அந்தப்படம் வெளியாகிவிடும் என்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சிம்பு படம் வருகிற அதேநாளில் கார்த்தி படமும் வெளிவருவதால் நடிகர்சங்கத்தேர்தலுக்குப் பிறகு மீண்டும் சிம்புவும் கார்த்தியும் மோதும் வாய்ப்பு உருவாகியிருக்கிறதென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top