ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தலைமை ஏதுமின்றி போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களின் தொடர் ஒத்துழைப்பால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு கமல், ரஜினி, விஜய், லாரன்ஸ், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, விஷால், தனுஷ், ஜி.வி.பிரகாஷ் உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திரை உலகம் சார்பில் ஆதரவு தெரிவிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் இயக்குனர்கள் கவுதமன், அமீர், நடிகர்கள் ஆர்யா, ஆரி, இசை அமைப்பாளர்கள் யுவன்சங்கர்ராஜா, ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் பங்கேற்றனர். சேலத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் நடிகர், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டார்.

இந்நிலையில், சிம்பு தனது வீட்டின் முன்பு அறவழியில் போராட்டத்தை தொடங்கியுள்ளார். சிம்புவுடன், ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் வசந்த், ராஜதந்திரம் புகழ் வீரபாகு உட்பட பலரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.