சந்தானம் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் மிகப்பெரிய காமெடி நடிகராக இருந்தார் பின்பு அவர் நடிகனா நடிக்கணும் என்ற ஆசை வந்தது இதனால் அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

சந்தானத்தின் படங்களும் ஓரளவு தான் ஓடியது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம்.

அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில், சந்தானம் நடிக்கும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. இந்த படத்தை வி.டி.வி கணேஷ் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் விவேக், ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.santhanam as action hero

இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்று இத்தனை நாட்கள் அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் இந்தப்படத்துக்கு சிம்பு இசையமைக்கிறார் என்ற சர்ப்ரைஸ் அறிவிப்பை, சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிம்பு முதல்முறையாக இசையமைக்கும் படம் இதுதான். அதேபோல், சக்க போடு போடு ராஜா படத்துக்கு இசைமைக்க உள்ளதாக சிம்வும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது பிஸியான ஹீரோவாகிவிட்டார் சந்தானம் ‘தில்லுக்கு துட்டு’ படத்திற்குப் பிறகு ‘சர்வர் சுந்தரம்’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘ஓடி ஓடி உழைக்கனும்’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கிறார் இப்படங்கள் அனைத்தும் தயாராகி வருகிறது.

அதிகம் படித்தவை:  சந்தானம் நடிக்கும் காதல் படம்

இதில் பால்கி இயக்கியிருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படம் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ படங்கள் படப்பிடிப்பில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பட வேலைகள் முடிவடைந்து விட்டன.

அதிகம் படித்தவை:  ஒரு வார முடிவில் தில்லுக்கு துட்டு பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்

விடிவி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை ‘லொள்ளு சபா’ புகழ் சேதுராமன் இயக்கி வருகிறார்.இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் நடிகர் சிம்பு தான் இப்படத்தின் இசையமைப்பாளர். சிம்பு இசையில் அனிருத், யுவன் சங்கர் ராஜா, டி.ரஜேந்தர், உஷா ராஜேந்தர், உன்னி கிருஷ்ணன் மகன் வாசுதேவ் முதலானோர் பாடல்களை பாடியுள்ளது இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘கலக்கு மச்சான்’ என்ற பாடல் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை VTV கணேஷ் தயாரிக்கிறார்.

சிம்பு – அனிருத் ஆகிய இருவரும் பீப் சாங் சர்ச்சைக்குப்பிறகு ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் இணைந்துள்ளனர்.

‘கலக்கு மச்சான்…’ எனத் தொடங்கும் ஒரு பாடல் சிம்பு இசையில் அனிருத் பாடியுள்ளார். இந்த பாடலின் சிங்கிள் ட்ராக் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது.அதனை தொடர்ந்து படத்தை வெளியிடுவதற்கான வேலையில் இறங்கவுள்ளனர் படக்குழுவினர்.