Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு, முன்னணி நடிகை மோதல்! பஞ்சாயத்து செய்த பிரபல இயக்குனர். யார் அந்த நடிகை?
கொஞ்ச நாளா சிம்புவை பற்றி ஒரு பரபரப்பு இல்ல, சிக்கல் இல்ல மணிரத்னம் படத்தில் சேர்ந்ததுக்கு அப்புறம் அவ்ளோ மாற்றமா அப்படினு யோசிக்கரதுக்குள்ள பழைய பிரச்சனை வந்துள்ளது.
மாநாடு படத்தை சிறப்பா ஆரம்பித்து முடிக்கலாம்னு திட்டமிட்டுள்ளார். அடுத்து சுந்தர் சி படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் மேகா ஆகாஷ் ஜோடியாக, ஒரு ஜோடியுடன் எப்படி நடிப்பார் சிம்பு கண்டிப்பா இன்னொரு ஜோடி வேணுமே. அதில்தான் பஞ்சாயத்து. ரெண்டாவது ஜோடியாக நடிக்க தமன்னாவை நடிக்க வைக்க சுந்தர் சி ஆசைபடுகிறார். ஆனால் AAA படத்தில் ஏற்கனவே சிம்பு தமன்னாவுக்கு சண்டை சச்சரவு இருந்துள்ளது. இதனை தமன்னா சுந்தர்சியிடம் புலம்பியுள்ளார்.

Tamannaah
ஆனால் சுந்தர் சி தமன்னாவை விடுவதாக இல்லை. வெயிட் பண்ணுங்க நான் சிம்புவிடம் பேசுகிறேன்னு என்று தினம் தினம் பேசி பஞ்சாயத்து பேசி முடித்துள்ளார். தமன்னாவும் இப்ப ஓகே சொல்லியுள்ளார். எப்படியோ ஒரு வழியா பிரச்சனை இப்ப முடிந்தது ஆனால் படம் முடியறதுக்குள்ள வேற என்ன என்ன பிரச்சனை வர போகிறதோ. பொறுத்திருந்து பார்க்கலாம்.
