வெற்றி வந்ததும் வேலையை காட்டிய சிம்பு.. வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு

இனிமேல் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகர் கிடையாது என ஒதுக்கப்பட்ட நடிகர் லிஸ்டில் சேர்ந்தவர் சிம்பு. ஆனால் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவின் சினிமா கேரியரை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது.

ஒரே படத்தில் தான் இழந்த மார்க்கெட் பெயர் என அனைத்தையும் மீட்டு எடுத்து விட்டார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக உருவெடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அதெல்லாம் நீங்க எப்படி நினைக்கலாம் என சொல்லும் அளவுக்கு சமீபத்தில் நடந்து கொண்டுள்ளார் சிம்பு. சிம்புவின் மாநாடு திரைப்படம் விரைவில் 100 கோடி வசூல் என்ற லிஸ்டில் இணைய உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பான பேச்சு அடிபட்டு கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் படக் குழுவினருடன் சேர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு வெற்றி விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவுக்கு படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் வந்திருந்தனர். ஆனால் சிம்பு மட்டும் மிஸ்ஸிங்.

சிம்பு இந்த படத்தின் வெற்றி விழாவுக்கு வராததை மேடையிலேயே விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கண்டித்தார். வெற்றி பெற்றவுடன் தலைக்கனம் வந்துவிடக் கூடாது எனவும் சூட்டிங்கில் எப்படி இருந்தோமோ அப்படித்தான் ஒவ்வொரு படத்தின் வெற்றியின் போதும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதையே தான் என்னுடைய மகன் விஜய்க்கும் நான் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் க்கும் இடையில் சேட்டிலைட் விற்பனையில் முரண்பாடு ஏற்பட்டது குறிப்பிட வேண்டிய ஒன்று. இதனால் மீண்டும் தந்தையின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தயாரிப்பாளர்களை மதிக்காமல் சிம்பு நடந்து கொள்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்