கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் வெளியானது. இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள தள்ளிபோகாதே எனும் பாடல்தான் தற்போது இளைஞர்களிடம் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் இப்பாடல் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 14-ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இப்பாடல் ஒரு நாளைக்கு முன்பாக அதாவது ஜனவரி 13-ம் தேதியே வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் தாமரை இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.