Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல பிக்பாஸ் நடிகைக்கு அறிவுரைகூறிய சிம்பு.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் மூலம் பிரபலமான மீரா மிதுன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே திட்டும் வாங்கிக் கொள்வார். அந்தவகையில் பிக்பாஸ் வீட்டினுள் நடந்துகொண்ட விதத்தை நடிகர் சிம்பு தன்னிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.
அதாவது இயக்குனர் சேரனிடம் நடந்த கொண்டது பெரும் தவறு மற்றும் நீங்கள் சில விஷயங்களை தைரியமாக கையாள்கிறீர்கள் அதை சரியாக பயன்படுத்துங்கள் என்று தெரிவித்தாராம். இவ்வாறு தன்னிடம் கூறியதாக சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு பேட்டியில் மீராமிதுன் தெரிவித்துள்ளார்.
இவரை நடிகர் நடிகைகள் திட்டாமல் இருந்தால் தான் தவறு, ஆனால் இது சிம்புவுக்கு தேவையில்லாத வேலை என்று ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர்.
சிம்பு தனக்கான பிரச்சனைகளை தைரியமாக கையாண்டால் மட்டுமே சினிமாவில் இன்னும் பல வெற்றிகளைப் பெறமுடியும் என்று அறிவுரை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மீரா மிதுனை கூப்பிட்டு அறிவுரை கூறுவது தேவையில்லாத வேலை என்று திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனால் அவரின் தரம் குறையும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
