நான் வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்கிறேன். அது தான் என் பிரிச்சனை. சிம்பு ஓபன் டாக்.

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தைத் தயாரித்த வகையில், மைக்கேல் ராயப்பனுக்கு ஏகப்பட்ட கோடிகள் நஷ்டம். சில நாட்களுக்கு முன் தாங்கள் பட்ட இன்னல்களை பற்றி  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்  மைக்கேல் ராயப்பன் மற்றும் படத்தின் இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன்.

அதற்க்கு பதில் சந்தானத்தின் சக்கபோடு போடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் சிம்பு சொல்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் படத்தின் இசையை பற்றி முதலில் பேசினார், பின்னர் தனுஷ் தனக்கு எவ்வளவு நெருக்கம் என்பதையும் பேசினார். பின்னர் தான் தயாரிப்பாளரின் சர்ச்சைக்குறிய கேள்விக்கு பதில் சொன்னார்.

AAA படம் சரியாக போகவில்லை. அது என்னோட ரசிகர்களான உங்களுக்காக ஜாலியா எடுக்கப்பட்ட படம். படத்தோட பட்ஜெட் அதிகமானதால் இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டோம். ஒரே ஒரு விஷயம் மட்டும் கேட்கிறேன், படம் வெளியாவதற்கு முன்பு பேசி இருக்கலாம். இல்லை என்றால்  படம் ரிலீசாகி  ஒரு மாதம் கழித்து கூட பேசியிருக்கலாம். ஆனால் ஏன்  6 மாதம் கழித்து பேசியிருக்கிறார்கள். அது தான் எனக்கு வருத்தமா இருக்கு. என்மீது தொடர்ந்து புகார் வருகிறதென்றால் என்மீது தவறு இல்லாமல் இருக்கமுடியாது. நான் நல்லவன் என்று சொல்ல வரவில்லை. நான்  தவறு செய்திருந்தால், அதற்கு  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஏன் என்னை அனைவரும் வெறுக்கிறார்கள், என்ற கேள்விக்கு நான் பதில் கண்டு பிடித்து விட்டேன். எனக்கே இவ்வளவு வருடங்கள் ஆகி இருக்கு இதற்கு பதில் கண்டு பிடிக்க. மற்றவர்கள் பார்க்கும் பார்வையில் நான் இந்த உலகை பார்ப்பதில்லை அது தான் என் பிரச்சனை.

எல்லோரும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பார்த்தால் எனக்கு தெய்வம், குரு, பிதா, மாதா என்று தலைகீழாகத்தான் நான் வரிசை படுத்தி வைத்துள்ளேன். இறைவன் தானுங்க நமக்கு இந்த வாழ்க்கையை கொடுத்தது, ஆனால் கடவுள் அவரை முதல் நிலை படுத்திக்கொள்ள மாட்டார் அதான் கடைசியில் இருக்கிறார். என்னை பொறுத்தவரை கடவுள் தான் முதல். பின்னர் குரு. யார் வீட்டு பிள்ளைக்கோ தனக்கு தெரிந்த அனைத்தையும் கற்று கொடுப்பவர். அடுத்ததாக தந்தை, தாயை விட அவர் கிரேட். தான் பார்க்க முடியாத விஷயத்தை தன் மகன் பார்க்க வேண்டும் என்பதற்க்கு தன் தோளில் உட்கார வைப்பவர். எனக்கு குரு மற்றும் தந்தை இருவரும் ஒருவர் தான். அந்த மாதிரி அமைத்துக்கொடுத்ததுக்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். எங்க அம்மா அப்பா எங்க வரவில்லை. சாரி மா உன்னை கடைசில வைச்சிருக்கேன் என்று தப்பா நினைக்காத. எல்லாவற்றிற்கும் காரணமான இறைவனே லாஸ்ட்ல தான் வராரு. அம்மா என்பவர் இன்னொரு கடவுள் அதனால் நீ லாஸ்ட்.

மணி சார் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதில் நான் நடிக்கிறான் என்று தான் அவர் சொல்லியுள்ளார். என்னவோ அவருக்கு என் மேல் அப்படி ஒரு நம்பிக்கை. ஒரு வேலை அவரும் உங்களைப்போல் என் ரசிகரோ என்னவோ. இந்த தொப்பை தான் கரைக்கிறதுக்கு கஷ்டமா இருக்கு. விரைவில் ரெடி பண்ணிடுவேன்.’ என்றார்.

Comments

comments

More Cinema News: