simbu-aaa-movie

மணிரத்னம் படத்தில் நடிக்கப்போகும்  சிம்பு, அதற்கான நடிப்பு ஒத்திகை மற்றும்  பயிற்சியில் நேற்று  கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர் மணிரத்தினதுடன் எடுத்துக்கொண்ட போட்டோ தான் வைரலாகி வருகின்றது.

மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில்  வெளியான ‘காற்று வெளியிடை’ எதிர்மரையான விமர்சனங்களை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் படம்   தோல்வியை தழுவியது. இதனை தொடந்து தனது அடுத்த படத்தின் தகவலை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் 17 வது படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஸ்ரீகர் பிரசாத்  படத்தொகுப்பு.

இது ஒரு மல்டி ஸ்டார்கள் நிறைந்த படம் . விஐய் சேதுபதி, ஜோதிகா  சிம்பு,அரவிந்சாமி,ஐஸ்வரியா ராஜேஷ், பாஹத் பாசில் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏற்கெனவே திட்டமிட்டபடி  ஜனவரி 3 வது வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

அதிகம் படித்தவை:  வைரலாகுது ஓவியாவிற்காக சிம்பு பாடும் "காதல் கடிக்குது" பாடல் ரெகார்டிங் வீடியோ !

சிம்பு

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தைத் தயாரித்த வகையில், மைக்கேல் ராயப்பனுக்கு ஏகப்பட்ட கோடிகள் நஷ்டம். சில நாட்களுக்கு முன் தாங்கள் பட்ட இன்னல்களை பற்றி  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்  மைக்கேல் ராயப்பன் மற்றும் படத்தின் இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன். சிம்புவிற்கு நடிக்க  ரெட்  கார்டு வழங்கப்படும் நிலையும் வந்தது. இந்நிலையில் சிம்பு ; சந்தானத்தின் ‘சக்கபோடு போடு ராஜா’ இசை வெளியீட்டு விழாவில்  மன்னிப்பும் கேட்டார்.

நேற்று மணிரத்னத்தின் பயிற்சிப்பட்டறைக்குச் சென்ற சிம்பு, தான்  இசையமைத்திருக்கும் ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தின் சி டி யை அவரிடம் கொடுத்து  ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்.

சிம்பு, படத்திற்கான கதையை படித்து பார்த்துள்ளார். தொடர்ந்து நடிப்பு பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். பின்னர்  மணிரத்னத்துடன் செல்பி ஒன்றும் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஜில் ஜங் ஜக், இறுதிச்சுற்று, விசாரணை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் - முழு விவரம்

சினிமாபேட்டை கிசு கிசு

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிடம், இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு சென்றுள்ளது, எனினும் அவர் அதை மறுத்து விட்டதாக சிலர் கூறி வருகின்றனர்.

சுஹாசினி மணிரத்தினம், ஒப்பந்தத்தில் கடுமையான விதிமுறைகளை சேர்த்து சிம்புவிடம் கையெழுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர வேண்டும். சிம்புவின் செயலால்  பொருள் இழப்பு ஏற்பட்டால் அதனை இரு மடங்காக திருப்பித் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தில் முக்கிய விதி என்று கூறப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்தி மறுக்கும்  சிம்பு,  தனது இமேஜை தூக்கி நிறுத்தும் இறுதி  வாய்ப்பு மணிரத்னம் அவர்களின்  படம் தான் என்பதால் அதற்கு சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.