Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவின் புதிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு! அனைவரும் வியந்தனர்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்ட விதம் குறித்து நடிகர் அரவிந்த் சாமி வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் செக்கச் சிவந்த வானம். மணிரத்னம் இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். மெகா நட்சத்திர கூட்டம் இப்படத்தில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாகவும், சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த் சாமி அரசியல்வாதியாகவும், அருண்விஜய் கோவக்கார இளைஞராகவும் நடிப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது.
இதில் அரவிந்த் சாமிக்கு ஜோதிகா தான் ஜோடி என்றும், அவரும் பெண்ணியம் பேசுபவராக நடித்துள்ளதாகவும் தெரிகிறது. படத்தின் கதை பின்னணி தொழிற்சாலையால் நிலங்களுக்கு ஏற்படும் கழிவுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்சனையையும் காட்சிப்படுத்த இருப்பதாக தெரிகிறது. பெரும்பாலான படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிந்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது.
இந்நிலையில், செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு குறித்து அரவிந்த் சாமி மனம் திறந்து இருக்கிறார். சிம்பு படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவதாக கோலிவுட்டில் பல காலமாக ஒரு புகார் இருக்கிறது. மற்ற படங்களில் எப்படி என தெரியாது இப்படத்தில் செம ஷார்ப்பாக நேரத்தை பயன்படுத்தினார். எங்கள் எல்லோருக்கும் முன்பே வந்து அமர்ந்திருப்பார். காலையில் ஆறு மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 5.40க்கு செல்வேன். ஆனால் அவர் ஐந்து மணிக்கே வந்து உட்கார்ந்துவிடுவார்’ என்று கூறி இருக்கிறார். அரவிந்த் சாமியின் இந்த கருத்துதால் சிம்பு ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.
எழுமின் ட்ரைலர் விழாவில் கலந்து கொண்ட சிம்பு, என் மீது வைக்கும் புகார் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது தான். சரி இனிமேல் கண்டிப்பாக அந்த தவறை செய்யமாட்டேன் என உறுதி அளித்தார். அதையே காப்பாற்றவும் தொடங்கி விட்டார் என கோலிவுட்டில் பேச்சுகள் அடிப்படுகிறது. பல சர்ச்சைகளை சந்தித்த சிம்பு, சமீபகாலமாக பாசிடிவ் கருத்துக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
