fbpx
Connect with us

Cinemapettai

ஜில்லுனு ஒரு காதல் படத்தின் வாய்ப்பை தவறவிட்ட நடிகை! இப்ப பீல் பண்ணி என்ன ஆக போகுது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜில்லுனு ஒரு காதல் படத்தின் வாய்ப்பை தவறவிட்ட நடிகை! இப்ப பீல் பண்ணி என்ன ஆக போகுது

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியராக வலம் வரும் சூர்யா-ஜோதிகா, முதல்முறையாக கணவன் மனைவியாக நடித்து மெகா ஹிட் கொடுத்த படம்தான் ‘சில்லுனு ஒரு காதல்’.

இந்த படத்துல சூர்யா ஜோதிகாவின் கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லாவே ஒர்க் அவுட் ஆயிருக்கும். அதோட ஏ.ஆர். ரஹ்மானின் இசை இந்த படத்திற்கு கூடுதலாக வலுசேர்த்திருக்கும்.

இந்தப் படத்துல சூர்யா ஜோதிகாவை ‘ஜில்லு’னு கூப்பிடுறது, எல்லாரையும் ஏங்க வைக்கிற அளவுக்கு, காதல் கலந்த குடும்ப வாழ்க்கையை ரொம்ப அழகாக படமாக்கி இருப்பார் இயக்குனர் கிருஷ்ணன். இந்த படத்துல குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி ஸ்ரியா சர்மா அட்டகாசமாக நடித்திருப்பார்.

இந்தப் படத்தில் சூர்யாவின் முன்னாள் காதலியாக நடித்த பூமிகாவிற்கு பதிலாக அசின் தான் ஒப்பந்தமாகியிருந்தார் என்ற சீக்ரெட் தற்போது ரிலீசாகி உள்ளது.

இப்படி ஒரு வாய்ப்பை தவறவிட்ட அசின், ஒருவேளை கஜினி படத்தின் மூலம் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து சலித்து விட்டதால், இந்த படத்துல நடிக்க விருப்பம் இல்லைன்னு சொல்லி இருக்காங்க போல தெரியுது.

எப்படி பார்த்தாலும் ஒரு பெரிய சான்ஸ்ச மிஸ் பண்ணிட்டாங்கனு தான் சொல்லணும். அதே சமயத்துல பூமிகா இந்த பட வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு தனது நடிப்பினை ரொம்ப கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

Continue Reading
To Top