Connect with us
Cinemapettai

Cinemapettai

சில்லுனு ஒரு காதல் ஐஸ்வர்யாவா இது? என்ன கொடுமை ஆண்ட்டி இது என புலம்பும் நெட்டிசன்கள்

sillunu-oru-kadhal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சில்லுனு ஒரு காதல் ஐஸ்வர்யாவா இது? என்ன கொடுமை ஆண்ட்டி இது என புலம்பும் நெட்டிசன்கள்

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா சர்மா.

அந்தப் படத்தில் உள்ள பாடல்களை  இன்று வரை நம்மால் எப்படி மறக்க முடியாதோ, அதேபோல்தான் அந்தப்படத்தின் ஐஸ்வர்யா ரோலையும் மறக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு செம க்யூட்டான  ரியாக்சன்களை அள்ளித் தெளித்து இருப்பார் ஸ்ரேயா.

மேலும் ஸ்ரேயா சிறுவயதிலிருந்தே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்ததால், முட்டி மோதி விடாமுயற்சியுடன் தெலுங்கில் ‘காயகுடு’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதால் ஸ்ரேயா மேலும் சில வாய்ப்புகளை  டோலிவுட்டில் பெற்றார்.

அதை தொடர்ந்து ஸ்ரேயா நாகார்ஜுனாவின் தயாரிப்பில் ‘நிர்மலா கான்வென்ட்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் டோலிவுட்டின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனால் தற்போதும் ஸ்ரேயா சர்மாவிற்கு தெலுங்கில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

படவாய்ப்புகள் குறைந்து இருப்பதால் ஸ்ரேயா சர்மா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில்  ஸ்ரேயா சர்மா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் வியந்து போயுள்ளனர்.

அந்தவகையில் ஸ்ரேயா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் கிரே கலர் சேலை அணிந்து ஆன்ட்டி போல தோற்றம் கொண்டிருக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர், ‘இவ்வளவு சின்ன வயசுல ஆன்ட்டி மாதிரி இருக்கீங்களே’ என்று கூறுவதோடு, அவரது க்யூட்நசை மிஸ் செய்வதாக  இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top