Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாயடைத்துபோன இயக்குனர்! சில்லுக்கருப்பட்டி படக்குழுவுக்கு சூர்யாவும் ஜோதிகாவும் அளித்த பரிசு
சில்லுக்கருப்பட்டி படத்தின் குழுவை தனது வீட்டுக்கு அழைத்து நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் பாராட்டியுள்ளனர்.
4 வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய ஆந்தாலஜி வகை படம் சில்லுக்கருப்பட்டி. சமுத்திரக்கனி, சுனேனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், பேபி சாரா உட்பட பலர் நடித்திருந்தார்கள். ஹலிதா ஷமிம் இயக்கி இருந்தார்.
இவர் ஏற்கனவே பூவரசம் பீப்பி படத்தை இயக்கி கோலிவுட்டின் பிரபலங்களிடம் பாராட்டை பெற்றார். சில்லுக்கருப்பட்டி படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சினிமாவில் இதுரைஇல்லாத புதிய முயற்சிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோலிவுட்டில் வனிக்கத்தக்க இயக்குனர் ஆனார் ஹலிதா அடுத்த பட போஸ்டரை வெளியிட்டார் சுவரில் சாத்தப்பட்டிருக்கும் சைக்கிள், பின் கேரியரில் ஐஸ்பெட்டி, ஒரு ஜன்னல் என கிராமத்தை ஞாபகப்படுத்தும் அந்த போஸ்டரில் சைக்கிள் டயரில் ஏலே என்ற எழுத்து இருந்தது. இதனால் சில்லுக்கருப்பட்டி படத்தை தொடர்ந்து இதுவும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.
இதன் மூலம் மீண்டும் யதார்த்த சினிமாக்கள் வரும் என்ற நம்பிக்கையை இப்படம் அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், வால்வாச்சர் பிலிம்ஸுடன் இணைந்து ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

halitha
கபேர் வாசுகி இசை அமைக்கிறார். இந்நிலையில் இயக்குனர் ஹலீதாவையும் சில்லுக்கருப்பட்டி பட டீமையும் நடிகர் சூர்யா நேற்று தனது வீட்டுக்கு அழைத்தார். சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் ஒவ்வொருவரையும் பாராட்டினார்கள். இதுபற்றி ஹலிதா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

halitha
அதில், சூர்யாவும் ஜோதிகாவும் எங்கள் டீமை வீட்டுக்கு அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்களின் பாராட்டில் பேச்சற்றுப் போனேன். அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு என் நன்றிகளைத் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு ஆப்பிள் மேக்புக்கை(New Apple MacBook Pro) பரிசளித்தனர் என்று தெரிவித்துள்ளார்.
