சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் ஆர்யா.. 4 வருஷமா பதுங்கிய சார்பேட்டா கபிலன்

2021 சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின் ஆர்யாவிற்கு சொல்லிக் கொள்ளும்படி என்ற படமும் போடவில்லை.அரண்மனை 3, எனிமி, காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், போன்ற படங்களில் நடித்தாலும் பெயர் கிடைக்கவில்லை.

இப்பொழுது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒரு படத்தை குறி வைத்து வருகிறார் ஆர்யா. இதற்காக ராம் நாட்டில் ஒரு பெரிய பிரம்மாண்ட அரண்மனை செட் அமைத்து சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஆர்யா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

ஆர்யா நடித்ததிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட நூறு கோடிகள் வரை இந்த படத்திற்கு செலவு செய்கின்றனர். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளி வருகிறது.

4 வருஷமா பதுங்கிய சார்பட்டா கபிலன்

இந்த படம் அரசர்கள் பற்றிய கதையாம். முதல் முதலாக ஆர்யா பீரியாடிக் பிலிமில் நடிக்கிறார். ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி நடிப்பதாக இருந்த சங்கமித்ரா படமும் ஒரு அரசர் காலகட்ட கதை களம் தான். ஆனால் இந்த படம் இன்று வரை கை கூடி வரவில்லை.

ஆர் கே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த ரன் பேபி ரன் படத்தின் இயக்குனர் ஜெயன் கிருஷ்ணகுமார் தான் இந்த படத்தை இயக்குகிறார்.மோகன்லால் நடித்த லூசிபர் படத்தில் ரைட்டராக வேலை செய்த முரளி கோபி இதில் பணியாற்றுகிறார். ஆர்யா இந்த படத்தை பெரிதும் நம்பி முழு ஒத்துழைப்பு செய்து வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News