Simbu-STR51: சிம்பு இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சோசியல் மீடியா ஆரவாரமாக இருக்கிறது. நேற்றிலிருந்து அவருடைய ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதன்படி ராம்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் 49 வது பட அறிவிப்பு நேற்று வெளியானது. அதைத் தொடர்ந்து இன்று அட்டகாசமான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
அதில் சிம்பு தயாரித்து நடிக்கும் 50வது பட அப்டேட் போஸ்டரோடு வந்தது. தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் கனவு படமான இதன் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் சிலம்பரசன்.
மன்மதனாக மாயாஜாலம் செய்ய வரும் சிம்பு
அதைத்தொடர்ந்து தற்போது அவரின் 51வது பட அப்டேட் வந்துள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார்.
காட் ஆப் லவ் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஃபேண்டஸி கமர்சியல் வகையை சேர்ந்தது. இந்த போஸ்டர் சிம்பு கையில் ஒரு மாய மோதிரத்தை வைத்திருப்பது போல் இருக்கிறது.
இதிலிருந்து ஏதோ மாயாஜாலம் கலந்த காதல் கதையாக இருக்கும் என தெரிகிறது. காதலின் கடவுள் என்றால் மன்மதன் தான்.
அது சம்பந்தப்பட்ட கதையாக இப்படம் இருக்கும் எனவும் யூகிக்க முடிகிறது. இதன் மூலம் பல வருடங்களுக்கு முந்தைய சிம்புவை நாம் பார்க்கலாம்.
ஆக மொத்தம் இந்த பிறந்தநாள் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கிறது. இப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையை குறி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.