தமிழ் சினிமாவை கௌரவிக்கும் பொருட்டு SIIMA விருது விழா ஆண்டு தோறும் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான விருது விழா விரைவில் நடக்கவுள்ளது.

இதில் இந்த வருடம் சிறந்த நடிகர்கள் பிரிவில் விக்ரம்(ஐ), தனுஷ்(அனேகன்), விஜய் சேதுபதி(ஆரஞ்சுமிட்டாய்), ஜெயம் ரவி(தனி ஒருவன்), லாரன்ஸ்(காஞ்சனா-2) ஆகியோர் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த நடிகைகள் பிரிவில் நித்யா மேனன்(ஓ காதல் கண்மணி), நயன்தாரா(நானும் ரவுடி தான்), எமி ஜாக்ஸன்(ஐ), ஐஸ்வர்யா ராஜேஸ்(காக்கா முட்டை), ஜோதிகா(36 வயதினிலே) ஆகியோர் போட்டியாளர்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் சிறந்த படம் பிரிவில் காக்கா முட்டை, தனி ஒருவன், ஐ, ஓ காதல் கண்மணி, நானும் ரவுடி தான் படங்களும், இயக்குனர்களில் விக்னேஷ் சிவன், மோகன் ராஜா, மணிரத்னம், கே.வி.ஆனந்த், கௌதம் மேனன் ஆகியோர் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்