Connect with us

Cinemapettai

இது மாமன் – மச்சான் லவ் : திரைவிமர்சனம் சிவப்பு மஞ்சள் பச்சை

Cinema News | சினிமா செய்திகள்

இது மாமன் – மச்சான் லவ் : திரைவிமர்சனம் சிவப்பு மஞ்சள் பச்சை

பிச்சைக்காரன் வெற்றியை தெடர்ந்து சசி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம். எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆகாத சூழலில் அதீதத்தை ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸ் ஆகியுள்ளது.

கதை – சிறுவயதில் ஆனதை ஆகும் அக்கா – தம்பி. வட சென்னை பைக் ரேஸராக ஜி வி பிரகாஷ். ட்ராபிக் போலீஸ் ஆக சித்தார்த் ரேஸ் ஓட்டும் ஜி வியை புரட்டி எடுக்கிறார். அடுத்த பிரம்மில் தன் அக்காவிற்கு பார்க்கும் மாப்பிளை சித்தார்த் என்பதை பார்க்கும் ஜி விக்கு அதிர்ச்சியும் நமக்கு சலிப்பும் தான் வருகின்றது. அக்காவிற்கு இந்த வரன் அமையக்கூடாது என தன் ஏரியா பாய்ஸுடன் லூட்டி, மறுபுறம் காதல் என முதல் பாதியில் ஜி வயின் ஆதிக்கமே தூக்கல்.

இரண்டாம் பாதியில் குடும்பம், பாசம், எமோஷன் மற்றும் பவர்புல் வில்லன் என செல்லும் திரைக்கதை, இறுதியில் மெஸேஜுடன் சுபமான எண்டிங் கொடுக்கிறது.

பிளஸ் – கதைக்களம், குடும்ப உறவை விவரித்த விதம்

மைனஸ் – சொதப்பலான பைக் ரேஸிங், பல இடங்களில் லாஜிக் மீறல்கள், அதீத செயற்கைத்தனம்

சினிமாபேட்டை அலசல்  அப்பா – மகள், அம்மா – மகன், அண்ணன்- தங்கை உறவுகளை போல மாமா – மச்சான் உறவை மையப்படுத்தி படத்தை எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் சசி. எனினும் இந்த ஒரு வரியை மட்டும் நம்பி படம் எடுக்கமுடியாது என்ற காரணத்தால், பலவற்றை புகுத்தி, திரைக்கதையை குழப்பி ஒருவழியாக முடித்து, ரிலீஸும் செய்துவிட்டார்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன் என அனைத்திலும் சசியின் பிளஸ் அந்த எமோஷன்களுடன் விளையாடுவது போன்ற திரைக்கதை தான். ஆனால் இப்படத்தில் அது மிஸ்ஸிங். சூப்பர் ஹிட் படமாக்க வேண்டிய அணைத்து விஷயமும் இப்படத்தில் இருந்தும், ஏனோ நமக்கு அந்த புரிதல் வரவில்லை என்பது தான் உண்மை.

சிகப்பு மஞ்சள் பச்சை – விபத்து

சினிமாபேட்டை ரேட்டிங்  2/5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top