ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

ரீல், ரியல் திருமணத்திற்குப் பிறகு சித்து வெளியிட்ட பதிவு.. கேட்காமல் கிடைத்த வரம் என் பொண்டாட்டி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் சித்து, ஸ்ரேயா. இந்த சேனலில் டிஆர்பி ஏறுவதற்கு திருமணம் சீரியல் முக்கிய காரணம்.சீரியல் வாழ்க்கை போலவே நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க தொடங்கினார்கள்.

இவர்களது காதலை வெளிப்படையாகவும் ரசிகர்களிடம் சொன்னார்கள். இதனால் சித்து, ஸ்ரேயா திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அண்மையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள், உறவினர்கள் என பலரும் வந்து வாழ்த்தினார்கள்.

சமீபத்தில் ஷபானா ஆரியன், ரேஷ்மா மதன் திருமண புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆனது. இதைத்தொடர்ந்து சித்து, ஸ்ரேயா திருமணம் புகைப்படங்களும் வைரல் ஆனது. சித்து தற்போது விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆலியா மானசா நடிக்கிறார்.

sidhu shreya
sidhu shreya

தற்போது சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் கேட்காமலே கிடைத்த வரம் தான் ஸ்ரேயா என்று காதல் மனைவியை வர்ணித்துள்ளார். திருமணம் சீரியல் நடிக்கும்போது ஸ்ரேயா தான் எனக்கு பொண்டாட்டி ஆகப் போறேன்னு கொஞ்சம் கூட தெரியாது. ரசிகர்கள் எங்களுக்கு ஏதோ மேஜிக் இருக்குன்னு சொல்வாங்க அது இப்போ உண்மை ஆயிடுச்சு. ஐ லவ் யூ பொண்டாட்டி என்று சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் திருமண சீரியலில் இவர்களுக்கு நடக்கும் திருமண புகைப்படமும், தற்போது நடந்த திருமண புகைப்படத்தையும் இணைத்து ரீல் மற்றும் ரியல் என்று பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சித்து, ஸ்ரேயாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News