கார்த்தியை ஹீரோவாக்க தயங்கிய மணிரத்னம்.. 18 வருடத்திற்கு முன்பே கைநழுவி போன வாய்ப்பு

விருமன் திரைப்படத்தின் அமோக வெற்றியால் கார்த்தி தற்போது பயங்கர குஷியில் இருக்கிறார். படம் வெளியான இந்த ஒரு வாரத்திற்குள் 50 கோடி வரை வசூலித்துள்ளதால் படக்குழு சக்சஸ் பார்ட்டி வைத்து அதை கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படத்தை அடுத்து கார்த்தி, மணிரத்தினம் இயக்கத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. விரைவில் இப்படத்திற்கான பிரமோஷன் வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கார்த்தி மற்றும் மணிரத்தினத்தின் முதல் சந்திப்பு குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Also read: ஒரே சாயலில் இருக்கும் விருமன், திருச்சிற்றம்பலம்.. யாரு யாரை காப்பி அடிச்சான்னு தெரியல!

மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து திரைப்படத்தில் கார்த்தி அசிஸ்டன்ட் டைரக்டராக பணி புரிந்தது பலருக்கும் தெரியும். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த கார்த்தி எப்படியாவது மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று தான் சென்னைக்கு திரும்பி வந்துள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவரின் ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிக்கும் ஒரு வாய்ப்பு அவருக்கு அமைந்திருக்கிறது. மணிரத்தினம் இயக்கிய அந்த படத்தில் மாதவன், சூர்யா, சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Also read: நாலா பக்க வசூலுக்கு பலே திட்டம் போட்ட மணிரத்தினம்.. பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபலம்

அதில் சூர்யாவுக்கு தம்பி போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது பட குழுவினர் மணிரத்னத்திடம் சூர்யாவின் தம்பியையே கேட்டுப்பார்க்கலாம் என்று கூறியிருக்கின்றனர். அதற்கு சம்மதித்த மணிரத்தினமும் கார்த்தியை வர சொல்லி இருக்கிறார்.

உதவி இயக்குனராக சேர நினைத்த வேளையில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறதே என்று நினைத்த கார்த்தியும் அவரை பார்க்க சென்றுள்ளார். ஆனால் சற்று பூசினார் போன்ற உடலுடன் இருந்த கார்த்தியை பார்த்த மணிரத்தினம் ரொம்பவே தயங்கி இருக்கிறார்.

அதை புரிந்து கொண்ட கார்த்தி நான் நடிப்பதற்காக வரவில்லை, எனக்கு உங்களிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனே மணிரத்தினம் கொஞ்சம் கூட யோசிக்காமல் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு கார்த்தி நடிக்க இருந்த அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் தேர்வு செய்யப்பட்டார். இப்படி அசிஸ்டெண்டாக சேர்ந்த கார்த்தி பின்னர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

Also read: 3-வது முறையாக சாதனை படைத்த கார்த்தி.. தொடர் விடுமுறையால் சக்கை போடு போட்ட வசூல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்