விஜய்சேதுபதி நடித்துள்ள சேதுபதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய சித்தார்த், விஜய்சேதுபதி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது முதல் படத்திலிருந்தே அவரை ரசித்து வருகிறேன். பேட்டிகளில்கூட அவரைப்பற்றி நிறைய பேசியிருக்கிறேன். அவரோட சக்சஸப் பார்த்து வயிற்றெரிச்சலா இருக்கு. ரொம்ப கஷ்டம். அவர் நடிச்ச பீட்சா படம் பார்த்ததில் இருந்தே அவரோட ரசிகனாகி விட்டேன். அதன்பிறகு பண்ணையாரும் பத்மினியும் படம் பார்த்து அசந்து விட்டேன். அவரோட நடிப்பு மட்டுமின்றி ஸ்கிரிப்டும் சூப்பராக இருந்தது.

அதனால் அந்த பட டைரக்டர் அருண்குமாரை தொடர்பு கொண்டு சார் உங்க அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவரோ, என் பர்ஸ்ட் பட ஹீரோ விஜய்சேதுபதியுடன் தான் அடுத்த படத்தை பண்ணப்போறேன் என்றார். அதுக்கு அப்புறம் பீட்சா பண்ணின என் ப்ரண்டு கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டேன். இல்லை சார் என் பர்ஸ்ட் பட ஹீரோ விஜய் சேதுபதிய வச்சுத்தான் என்னோட அடுத்த படத்தை பண்ணப்போறேன் என்றார். அதுக்கு அப்புறம் சூதுகவ்வும் படம் பண்ணிய நலன் குமாரசாமியிடம் சார் நாம ஒரு படம் பண்ணுவோம் என்றேன். அவரும், இல்லை சார் நான் விஜய்சேதுபதிய வச்சு அடுத்த படம் பண்ணப்போறேன் என்றார். இப்படி எல்லோரும் விஜய்சேதுபதிய வச்சே படம் பண்ணினா எங்களை வச்சு யாருய்யா படம் பண்ணுவா என்று கோபமாக கேட்டேன்.

அதிகம் படித்தவை:  ஆடியோ ரிலீஸ்க்கே டீசர் வெளியிடும் விஜய் சேதுபதி.!

மேலும், விஜய்சேதுபதிக்கிட்ட நல்ல டேலன்ட் இருப்பதால் அவரை வைத்தே தொடர்ந்து அவரது டைரக்டர்கள் படம் பண்ண நினைக்கிறார்கள். ஆனால் இப்படி எல்லா நல்ல டைரக்டருமே அவரை வைத்தே படம் பண்ணினால் நாங்களெல்லாம் என்ன செய்வது. அதனால் ஒரு இரண்டு படம் அவரை வைத்து பண்ணினால் எங்களைப்போன்ற நடிகர்களை வைத்தும் ஓரிரு படங்கள் பண்ணினால் நாங்களும் பிழைத்துக்கொள்வோம். மேலும், இப்படி எல்லா டைரக்டர்களுமே விஜய்சேதுபதியை தேடிச்செல்வதற்கும் ஒரு காரணம் உள்ளது. அவர் நடிப்பில் ஒரு பச்சோந்தி. எந்த கதையாக இருந்தாலும் அப்படியே மாறி விடுவார். அந்த கதைக்கு நான் மட்டுமே பொருத்தமாக இருப்பேன் என்கிற அளவுக்கு முழுமையாக மாறி நடிப்பார். அந்த அளவுக்கு அற்புதமான நடிகர் விஜய்சேதுபதி. அந்த வகையில், அவரது நடிப்பு மட்டுமின்றி, அவர் டயலாக் பேசும் ஸ்டைலும் ரசிகர்களைப்போன்று எனக்கும் பிடித்திருக்கிறது என்றார்.